10/30/2011

يَا أَيُّهَا النَّبِيُّ اتَّقِ اللَّهَ وَلَا تُطِعِ الْكَافِرِينَ وَالْمُنَافِقِينَ إِنَّ اللَّهَ كَانَ عَلِيمًا حَكِيمًا {1}

33:1. நபியே! அல்லாஹ்வை அஞ்சுவீராக! (ஏக இறைவனை) மறுப்போருக்கும், நயவஞ்சகர்களுக்கும் கட்டுப்படாதீர்! அல்லாஹ் அறிந்தவனாகவும், ஞானமிக்கவனாகவும் இருக்கிறான்.

 
அமெரிக்காவில் கடந்த 2001ம் ஆண்டு செப்டம்பர் 11ம் தேதி உலக வர்த்தக மையம் இயங்கி வந்த இரட்டை கோபுர கட்டடத்தின் மீது இஸ்ரேலிய தீவிரவாத அமைப்புகள் ஜார்ஜ் புஷ்ஷின் ஒத்துழைப்புடன் விமான மூலம் இடித்துத் தகர்த்துவிட்டு அதை சர்வதேச யூத பயங்கரவாதிகளின் சிம்ம சொப்பனமாகத் திகழ்ந்து வந்த உஸாமா பின்லேடன் மீது திணித்து தாலிபான்கள் இஸ்லாமிய வழியில் ஆட்சி செய்து வந்த ஆப்கானிஸ்தானை தாக்கினர்.  


இவ்வாறு ஆப்கானிஸ்தானை தாக்குவதற்கு அண்டை நாடான பாகிஸ்தான் அமெரிக்காவுக்கு வெளிப்படையாகவே ஆரதரவளித்தது இந்த ஆதரவை தாலிபான்கள் அப்பொழுது அறவே கண்டு கொள்ளவில்லை அவர்கள் மலைகளுக்குள் சென்று தங்கள் வசிப்பிடத்தை வலுப்படுத்திக்கொண்டு பண்ணாட்டுப் படைகளின் மீது தாக்குதலை தொடுத்து வந்தனர். இதற்கிடையில் அமெரிக்காவுக்கு பாகிஸ்தான் ஆதரவளித்தக் காரணத்தால் பாகிஸ்தானில் உள்நாட்டு கிளர்ச்சி வெடித்து அரசுப் படைகளுக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் கடும் சண்டை மூண்டது இதையும் தாலிபான்கள் மீதே பழியைப் போட்டது அnரிக்கா.


பாகிஸ்தானின் அரசுப் பணியிடங்கள், பொது இடங்கள் தொடங்கி பள்ளிவாசல்கள் வரை தொடர்ந்து  குண்டுகள் வெடித்துக் கொண்டிருக்கின்றன எப்பொழுது எங்கு குண்டு வெடிக்குமோ என்ற பீதியில் மக்கள் உறைந்துப் போயிருக்கின்றனர் இதனால் பாகிஸ்தான் இரத்த பூமியாக மாறியது.


கடந்த 2001 முதல் 2011 வரை தற்கொலை தாக்குதல்கள் மட்டும் பாகிஸ்தானில் 303 தடவை நடத்தப்பட்டதாகவும் அதில் 4,808 பேர் உயிரிழந்ததாகவும், 10,149 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் படுகாயமடைந்தவர்களில் ஏராளமானோர் உடல் உறுப்புகளை இழந்துள்ளதாகவும் பாகிஸ்தான் உள்துறை அமைச்சகம் ஒருப் புள்ளி விபரத்தை வெளியிட்டுள்ளது.


பாகிஸ்தான் அரசு ஆப்கானிஸ்தானை தாக்குவதற்கு அமெரிக்காவுக்கும் ஆதரவளித்து விட்டு தாலிபான்களின் முக்கிய தலைவர்களுக்கும் பாகிஸ்தானுக்குள் புகலிடம் அளித்து மீனுக்குத் தலையையும், பாம்புக்கு வாலையும் ஆட்டிய பாகிஸ்தானின் இரட்டை நிலை ஆதரவினால் தான் கடந்த பத்து ஆண்டுகளில் இத்தனைப் பெரிய எண்ணிக்கையிலான மண்ணின் மைந்தர்கள் மடிவதற்கும் கை, கால்கள் ஒடிந்து ஊணமாவதற்கும் காரணமாக அமைந்தது. 

அதிகபட்ச இஸ்லாமிய மக்களைக் கொண்ட அணுஆயுத உற்பத்தி திறன் கொண்ட நாட்டை ஆள்பவர்கள் அல்லாஹ்வுக்கு மட்டும் பயந்து அல்'லாஹ்வின் சட்டத்தை மக்களுக்கு அமுல் படுத்தி இருந்தால் இன்று இவரகளை காக்க அல்லாஹ் போதுமானவனாகி இருப்பான்.
33:1. நபியே! அல்லாஹ்வை அஞ்சுவீராக! (ஏக இறைவனை) மறுப்போருக்கும், நயவஞ்சகர்களுக்கும் கட்டுப்படாதீர்! அல்லாஹ் அறிந்தவனாகவும், ஞானமிக்கவனாகவும் இருக்கிறான்.


وَلْتَكُن مِّنكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَأُوْلَـئِكَ هُمُ الْمُفْلِحُونَ
3:104. நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர்.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.... அன்புடன் அதிரை ஏ.எம்.பாரூக்