10/30/2011

الْمُنَافِقُونَ وَالْمُنَافِقَاتُ بَعْضُهُم مِّن بَعْضٍ يَأْمُرُونَ بِالْمُنكَرِ وَيَنْهَوْنَ عَنِ الْمَعْرُوفِ وَيَقْبِضُونَ أَيْدِيَهُمْ نَسُواْ اللّهَ فَنَسِيَهُمْ إِنَّ الْمُنَافِقِينَ هُمُ الْفَاسِقُونَ

நயவஞ்சகர்களான ஆண்களும், பெண்களும் ஒருவர் மற்றவரைச் சேர்ந்தவர்கள். அவர்கள் தீமையை ஏவி, நன்மையைத் தடுக்கின்றனர். திருக்குர்ஆன். 9:67


வெட்கங்கெட்டதுகளின் ஒழுக்கங்கெட்ட செயலைக் கண்டித்து.


குவைத், யு.ஏ.இ, பஹ்ரைன், ஓமன் போன்ற நாடுகளில் கடற்கரை ஓரங்களில் ஈசல் படைகளைப் போல் நாளொரு மேனிப் பொழுதொரு வண்ணமாக விண்ணை முட்டும் நட்சத்திர ஹாட்டல்கள் உருவாகி வருகின்றன.  

வர்த்தக ரீதியாக இந்த நாடுகளுக்கு வருகை தரும் மேலை நாட்டவரும், பொழுது போக்கு அம்சங்கள் தடை செய்யப்பட்ட அதன் அண்டை நாடுகளிலிருந்து வரும் அரேபியர்களில் பெரும் புள்ளிகளின் விருப்பத்திற்கொப்ப இஸ்லாம் தடைசெய்த உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும் அனைத்தையும் அனுபவிக்கலாம் எனும் நிலை அவற்றில் நிலவி வருவதை அறிந்திருக்கிறோம்.  

இந்த ஹோட்டல்களில் தங்கும் உல்லாசப் பிரியர்கள் ஆரம்ப காலங்களில் அதன் கடலோரங்களில் குளித்து முடித்ததும் ஹோட்டலுக்குள் நுழைந்து விடுவார்கள். சமீபகாலமாக இந்த உல்லாசப் பிரியர்கள் குளிப்பதற்கு முன்பும், குளித்தப் பின்பும் நீண்ட நேரம் நீச்சல் உடையில் அவர்கள் தங்கி இருக்கும் ஹோட்டல்களுக்கு வெளியே சுற்றித்திரியும் பழக்கத்தை ஆரம்பித்துள்ளனர். 

இந்த கன்ட்ராவிக் காட்சிகளைக் கண்டு களிப்பதற்காக ஏராளமான இளைஞர்கள் அவ்வழியே வாகணங்களில் படையெடுப்பதால் ஒழுக்கக்கேடு மலிந்து விட்டதாகவும், இந்த அசிங்கத்தை தடை செய்யக்கோரி குவைத் பாராளுமன்றதில் வௌ;வேறுக் கட்சிகளைச் சேர்ந்த ஐந்து பாராளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை எழுப்பி உள்ளனர்.

கடற்கரைக்கு வெளியில் அரை நிர்வாணமாக சுற்றித் திரியும் வெட்கங்கெட்டதுகளின் ஒழுக்கங்கெட்ட செயலுக்கு தடை விதிக்கும்படியும், தடையை மீறுபவர்களுக்கு ஓராண்டு சிறை தண்டனையும், 3500 டாலர் அபராதமும் விதித்து சட்டமியற்றும்படியும், இதுவல்லாமல் பொது இடங்களிலும் இதேப்போன்று அல்லது இதைவிட அநாகரீகமாக நடந்து கொள்பவர்கள் மீதும் பாரபட்சமற்ற முறையில் இதே தண்டனையை நடைமுறைப்படுத்தும் படியும் வலியுருத்திக் கூறி உள்ளனர். 

இது அந்த நாட்டில் தூவப்பட்டுள்ள இஸ்லாமிய ஒழுக்க நாகரீகத்திற்கான முதல் விதை இன்ஷா அல்லாஹ் இது வளரும். 

இதற்கு நேர்மாறாக பாகிஸ்தான் பாராளுமன்றத்தில் சுற்றுலாத்துறைக்கான பாராளுமன்ற நிலைக்குழு கூட்டம் கூட்டப்பட்டப் பொழுது எம்.பி.க்களில் எராளமானோர் அரசு நடத்தும் ஹோட்டல்களில் மதுபானத் தடையை நீக்கும்படி கோரிக்கை எழுப்பி உள்ளனர்.

பாகிஸ்தானில் சமீபகாலமாக நிகழ்ந்து வரும் தீவிரவாத தாக்குதல்களால் சுற்றுலாப் பயணிகளின் வருகை வெகுவாக குறைந்து விட்டதால் சுற்றுலாத் துறையில் வருவாய் குறைந்துவிட்டது என்றும் தனியார் நடத்தும் ஹோட்டல்களிலும், ரிசார்ட்சுகளிலும், விடுதிகளிலும் மதுபானம் தாராளமாக அனுமதிக்கப்பட்டிருப்பதால் அங்கு சுற்றுலாப்பயணிகளின் கூட்டம் அலைமோதுகிறது என்றும் அரசு நடத்தும் ஹோட்டல்கள், விடுதிகள் வெறிச்சோடிக் கிடக்கிறது என்றும் பாகிஸ்தான் சுற்றுலாக்குழுத் தலைவரும், பாராளுமன்றப் பெண் உறுப்பினருமாகிய இஸ்லாமிய கலாச்சாரத்திலிந்து வெளியேறிய நிலோஃபர் பக்தியார் பிற எம்.பிக்களின் கோரிக்கைக்கு வலு சேர்க்கும் விதமாக கூறிஉள்ளார். நயவஞ்சகர்களான ஆண்களும், பெண்களும் ஒருவர் மற்றவரைச் சேர்ந்தவர்கள். அவர்கள் தீமையை ஏவி, நன்மையைத் தடுக்கின்றனர். திருக்குர்ஆன். 9:67.



இவர் ஏற்கனவே கிளைடர் விமான நிலையத்தில் ஃப்ரான்ஸ் நாட்டு பாராசூட் வீரருடன் இணைந்து ஒரே குடையில் பறந்து சாகசம் செய்து தரை இறங்கியதும் அவருக்கு முத்தம் கொடுத்து அமர்க்களப்படுத்தியதால் பாகிஸ்தான் ஷரீஅத் நீதிமன்றத்தில் இஸ்லாத்தை விட்டு வெளியேற்றி ஃபத்வா வழங்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அந்நிய குடிமகன்கள் கலாச்சாரப் பாரம்பரியமிக்க தன் தாய்நாட்டில் குடித்துக் கும்மாளமடித்து ஒழுக்கக்கேட்டை ஏற்படுத்துவதற்காக மதுவைத் திறந்து விடும்படி கோரிக்கை வைத்துள்ளார் இந்த நவீன யுகத்து நாகரீக மங்கை(?). இஸ்லாமிய பெண்கள் படித்து முன்னேற வேண்டும் என்று அடிக்கடி அவர்கள் கோரிக்கை எழுப்புவது இதற்காகத் தானோ என்னவோ ?

ஒரு காலத்தில் மொத்த உலகுக்கும் ஒழுக்கத்திற்கு முன்மாதரியாகத் திகழ்ந்த இஸ்லாமிய நாடுகளில் பல இன்று மேலைநாட்டு சீரழிவு கலாச்சாரத்தில் மூழ்கி ஒழுக்கத்தை தொலைத்துக் கொண்டிருக்கும் இந்த காலகட்டத்தில் உலக வல்லரசுகளின் கொலை வெறிப் பார்வையில் சிக்கிக் கொண்டிருக்கும் தாலிபான்கள் பாகிஸ்தானின் வடமேற்கு பகுதியில் தடையை மீறி போதைப்பொருள் விற்ற 65 பேரை பிடித்து தாலிபான் கோர்ட்டில் நிருத்தி குற்றத்தை ஊர்ஜிதப் படுத்திக்கொண்டு எவருடைய விமர்சனத்திற்கும், எவருடைய மிரட்டலுக்கும் அஞ்சாமல், தலைக்கு மேல் பொழியும் குண்டுகளைப் பற்றி கவலைப்படாமல் நெஞ்சுறத்துடன் நின்று பொது இடத்தில் நிருத்தி சவுக்கடிக் கொடுத்து பாரம்பரியமிக்க இஸ்லாமிய கலாச்சாரத்தை தாங்கிப் பிடித்துள்ளனர்.

அவர்களுக்கு பூமியில் நாம் வாய்ப்பளித்தால் தொழுகையை நிலை நாட்டுவார்கள். ஸகாத்தும் கொடுப்பார்கள். நன்மையை ஏவுவார்கள். தீமையைத் தடுப்பார்கள். காரியங்களின் முடிவு அல்லாஹ்வுக்கே உரியது. திருக்குர்ஆன். 22:41


وَلْتَكُن مِّنكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَأُوْلَـئِكَ هُمُ الْمُفْلِحُونَ


3:104. நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர்.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.... அன்புடன் அதிரை ஏ.எம்.பாரூக்