يُخَادِعُونَ اللّهَ وَالَّذِينَ آمَنُوا وَمَا يَخْدَعُونَ إِلاَّ أَنفُسَهُم وَمَا يَشْعُرُونَ
9. அல்லாஹ்வையும், நம்பிக்கை கொண்டோரையும் அவர்கள் ஏமாற்ற நினைக்கின்றனர். (உண்மையில்) தம்மைத் தாமே ஏமாற்றிக் கொள்கின்றனர். அவர்கள் உணர்வதில்லை.
======================================================================
முதல் கோணல் முற்றும் கோணல்
நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் மதீனாவில் இஸ்லாமிய அரசை நிருவியதும்; அவர்கள் முதலில் செய்த வேலை தங்களுடைய மருமகனார் அலி(ரலி) அவர்களை அனுப்பி தரைக்கு மேல் உயர்ந்திருக்கும் அனைத்து கப்ருகளின் உயர் மட்டத்தை சமன் படுத்த உத்தரவிட்டார்கள்.
ஏன் இதை முதல் வேலையாக செய்தார்கள் ?
மக்களால் ஏகஇறைவனுக்கு கலப்படமற்ற வணக்கம் செலுத்தப்படுவதற்கு பெரும்பாலான கப்ருகள் தடையாக இருப்பதாலும், மக்களை ஏமாற்றி அரசியல் நடத்துவதற்கும் பழம்பெரும் அரசியல் வாதிகள்> மஹான்கள்களுடைய சமாதி ஒரு காரணமாக அமைந்து விடுவதாலும் தரைக்கு மேல் உயர்ந்து காணப்படும் கப்ருகளை தரைமட்டமாக்கப்பட்டது.
நபிகள் நாயகம்(ஸல்) அவர்களுடைய அழகிய வழிமுறை அழியாத ஏடாக நம் கையிலிருக்கும் போது அதை விட்டு விட்டு மக்களை சுரண்டிப் பிழைக்கும் இந்திய அரசியல்வாதிகளுடைய பண்பை கையிலெடுத்துக் கொள்ளலாமா ? அதனால் முதல் கோணல் முற்றும் கோணல் என்கின்றோம்.
அறிஞர் அண்ணாவுடைய சமாதிக்கு கருனாநிதியும்> எம்.ஜி.ஆருடைய சமாதிக்கு ஜெயலலிதாவும்> காமராஜர் சமாதிக்கு வாசன் வகையறாக்களும்> பெரியார் சிலைக்கு வீரமனி வகையறாக்களும் மலர் வளையம் வைத்து நினைவஞ்சலி செய்வார்கள்.
இவ்வாறு ஏன் செய்கிறார்கள் ?
மேல்படி சமாதியில் அடங்கப்பட்டவர்களுக்கு அதிக ஆதரவாளர்கள் இருக்கின்றார்கள் அந்த ஆதரவாளர்களை தங்களது 'ஓட்டர்களாக தக்கவைத்துக் கொள்வதற்காக அவர்களுடைய பிறந்த நாள் அன்று> அல்லது இவர்களுடைய பதவி ஏற்பின் போது மலர்வளையம் வைத்து சம்மந்தப் பட்ட சமாதியின் முன் கூனிக் குறுகி கும்பிடுப் போடுவதைப் பார்த்து வருகிறோம்.
அதேப்போன்று இவர்களும் அவர்களது பதவி ஏற்பின் போது புட்டோவின் சமாதியின் முன்பு கூனிக் குறுகி நின்று அல்ஃபாத்திஹா ஓதுகிறார்கள்.
மறைந்த புட்டோவின் மகள் பெனாஸிரின்; ஆதரவாளர்களை தங்களது 'ஓட்டர்களாக தக்கவைத்துக் கொள்வதற்காக புட்டோவின் கப்ரில் கூனிக்குறுகி நிற்கின்றார்கள் மக்களை எமாற்றி அரசியல் நடத்துவதில் அவர்களுக்கும் இவர்களுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை என்பதை அறியலாம்.
உமருடைய நாவில் அல்லாஹ் பேசுகிறான் என்ற நற்சான்றிதழ் பெருமானார்(ஸல்) அவர்களால் வழங்கப்பட்ட உமர்(ரலி) அவர்களின் ஆட்சி காலத்தில் நடந்த ஓர் சம்பவத்தைப் பார்ப்போம்.
நபிகள் நாயகம்(ஸல்) அவர்களுடைய ஆட்சி காலத்தில் நிகழ்ந்த வரலாற்று சிறப்பு மிக்க ஹூதைபியா உடன்படிக்கை ஒரு மரத்தடியின் கீழ் நடத்தப்பட்டது நபிகளாருடைய வஃபாத்திற்குப் பின் மக்கள் அவ்வழியே போகும் போதும் வரும் போதும் அந்த மரத்தின் கீழ் தங்கிச் செல்வதை வாடிக்கையாக்கிக் கொண்டார்கள் இதை அறிற்த உமர்(ரலி) அவர்கள் மக்களுடைய பலஹீனத்தை தங்களுக்கு சாதகமாக்கிக் கொள்ளாமல் அந்த மரத்தையே வேரோடு வெட்டி விடும் படி உத்தரவிட்டார்கள். இப்பொழுது உள்ளவர்கள் மரியாதை நிமித்தம் அமர்ந்தாலும்> அதற்கடுத்த சந்ததிகளால் அவ்விடம் வணக்கஸ்தலமாகி விடலாம் நம்முடைய சமுதாயம் வழிகேட்டில் வீழ்ந்து மறுமையில் தோல்வி அடைந்து விடக்கூடாது என்ற சமுதாய உணர்வு மேலீட்டால் அந்த மரத்தை வேரோடு வீழ்த்துவதற்கு உத்தரவிட்டார்கள்.
மக்களை ஏமாற்றி அரசியல் நடத்துவதை இஸ்லாம் ஒருக்காலும் அனுமதிக்கவில்லை என்பதுடன் இஸ்லாம் இதை தடைசெய்கிறது யார் ஒருவர் பிறரை ஏமாற்ற நினைக்கின்றாரோ அவர் தம்மைத் தாமே ஏமாற்றிக் கொள்கிறார் என்றும் அவ்வாறு ஏமாறுவதை அவர்கள் இப்பொழுது உணர மாட்டார்கள் என்றும் அவர்கள் உணரக்கூடிய நாள் வரும் என்றும் இஸ்லாம் கூறுகிறது.
ஒவ்வொருவருடைய செயல்பாடும் அவரவர் கழுத்தில் கட்டி தொங்க விடப்பட்டிருப்பதாகவும் மறுமையில் அதை அவர்களிடமே கொடுத்து படிக்கச் சொல்லப்படுவதாகவும் அவ்வாறு அவர்கள் தங்களுடைய செயல்பாடுகளை படிக்கும்போது உலகில் யார் யாரை எப்பொழுது எவ்வாறு ஏமாற்றினோம் என்பதை படித்து விட்டு தங்களுக்கான தண்டனையை பெற்றுக் கொள்வார்கள் என்று இஸ்லாம் கூறுகிறது.
பாகிஸ்தான் பெரும்பான்மை முஸ்லிம்களை கொண்ட இஸ்லாமிய நாடு அதுவும் அனு ஆயுத நாடு என்பதால் பாகிஸ்தானின் அரசியல் மாற்றத்தை உலகம் முழுவதும் உள்ள மக்கள் உற்று நோக்கிய வேளையில் இப்படிப்பட்ட ஒரு ஏமாற்றுப்பேர்வழி கப்று வணங்கி பாகிஸ்தானுடைய தலைமைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு;ள்ளார் என்கின்ற செய்தி வருத்தத்தை அளிக்கிறது.
பாகிஸ்தான் அதிபர் கிலானி ஒரு கப்ரு வணங்கி மட்டுமல்ல> மாறாக கூத்தாடிகளின் அதிதீவிர ரசிகருமாவார் அதை அவரே சொல்கிறார் கேளுங்கள்.
TÖfÍRÖÁ ‘WRUŸ fXÖ SzÛL IÍYŸVÖWÖ›Á WpLŸ
CÍXÖUÖTÖ†, UÖŸo.27-
TÖfÍRÖÂÁ “‡V ‘WRUWÖL TR« H¼¿ C£eh• fXÖÂ, C‹‡V SzÛL IÍYŸVÖWÖ›Á WpLŸ BYÖŸ. A‰ÚTÖX TÖPf XRÖ UjÚLÐLŸ TÖP¥L· CY£eh ÙWÖ•T°• ‘zehUÖ•.
SÖÁ TÖWÖºUÁ\ NTÖSÖVLWÖL C£‹RÚTÖ‰, A‡LÖW†ÛR RY\ÖL�TVÁT|†‡ Rh‡ C¥XÖRYŸLºeh ÚYÛX ÙLÖ|†ÚRÁ GÁ¿ h¼\tNÖyz GÁÛ] ÛL‰ ÙNš‰ 2001-• Bண்| ˜cW� pÛ\›¥ AÛP†RÖŸ. pÛ\›¥ C£‹RÚTÖ‰ SÖÁ IÍYŸVÖWÖ›Á AÛ]†‰ pÂUÖeLÛ[�• GÁ ÚX�PÖ� L•�ïyP¡¥ TÖŸ†‰ Wp†ÚRÁ GÁ¿ ÙNÖ¥f\ÖŸ. jpdj; je;jp 27-3-2008
கடந்த இந்திரா காந்தி அம்மையாருடைய ஆட்சியின் போது மிசாவில் கால் உடைக்கப்பட்டு சிறையில் தள்ளப்பட்ட 'நீரோட்டம்' (அடியார்) அப்துல்லாஹ் அவர்கள். தனது சிறை வாழ்க்கையில் தன்னைப் படைத்த இறைவனுடைய பண்புகளை தெரிந்து கொள்ள ஆவல் கொண்டார்.
அப்பொழுது அவர் தன் மனைவியிடம் அனைத்து மத வேத கிரந்தங்களையும் சிறைக்கு கொண்டு வரும் படிக் கேட்டுக் கொண்டார்.
அவருடைய மனைவி கிருஸ்தவர் என்பதால் முதலில் பைபிளைக் கொண்டுவந்து கொடுத்து கர்த்தரே கடவுள் பைபிளை படியுங்கள் என்றுக் கூறினார் அதைப் படித்தார் மணதுக்கு திருப்தி ஏற்படவில்லை> அடுத்து 'கீதை' கொண்டு வரப்பட்டது அதையும் படித்தார் அதிலும் மணதுக்கு திருப்தி ஏற்படவில்லை> இறுதியாக குர்ஆன் கொண்டுவரப்பட்டது அதன் எளியநடை அவர் ஒரு எழுத்தாளர் என்பதால் அவரை வெகுவாகக் கவர்ந்தது அத்துடன் நபிகள் நாயகத்தின் வரலாறு கொண்டுவரப்பட்டு அதைப்படித்து கண்கள் கண்ணீரை தாரை தாரையாக கொட்டியது> சிறை வாழ்க்கை என்னை மாற்றியது இஸ்லாமே சத்திய மார்க்கம் என்று உணர்ந்து கொண்டேன் என்று பெருமையாகக் கூறினார்.
மேலும் கூறுகிறார்
சிறையிலிருந்து வெளியில் வந்ததும் முதல் வேளையாக 'இஸ்லாம் என் காதல்' எனும் நூலை எழுதினேன் அது உறுது மொழியில் மாற்றம் செய்யப்பட்டு மறைந்த பாகிஸ்தான் பிரதமர் ஜியாவுல் ஹக் என்னை பாகிஸ்தானுக்கு வரவழைத்து நிகழ்ச்சி ஒன்றிற்கு ஏற்பாடு செய்து அதில் அதன் முதல்பிரதியை வெளியிட்டு கௌரவித்தார் என்று வாழ்நாள் முழுவதும் பெருமையாக கூறினார்.
ஆனால் இவரோ தனது நெருக்கடியான சிறை வாழ்க்கையில் கூட தனது இரட்சகனுடைய ஆற்றலை தெரிந்து கொள்ள விரும்பாமல் ஐஸ்வர்யா ராயுடைய படங்களை ஒன்று விடாமல் லேப்டாப்பில் பார்த்து மகிழ்ந்ததை பெருமையாக கூறும் இவரைப்போன்ற வழிகேடர்களே இஸ்லாமிய நாடுகளை ஆளத் தகுதி(?)யானவர்கள் என்று உலக ரவுடி அமரிக்காவால் தீர்மானிக்கப்படுகிறது.
மேல்படி கிலானி பொறுப்பில் அமர்த்தப் பட்டதும் அமெரிக்காவிலிருந்து புஷ் வாழ்த்து செய்தி கூறியதுடன் தீவிரவாதிகளை முந்தைய அரiசைப்; போன்றே ஒடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டதாகவும் அதற்கு கிலாணி முந்தைய அரசை விட கூடுதலாக ஒடுக்குவேன் என்றுக்கூறி புஷ்ஷை உற்சாகப் படுத்தியதாக மேலும் ஒரு தகவல் தெரிவிக்கிறது. அல்லாஹ்வே பாகிஸ்தானை ஒரு ஆப்கானிஸ்தானைப் போன்றோ ஒரு ஈராக்கைப் போன்றோ ஆக்காமல் பாது காக்க வேண்டும்.
நாம் கேட்கின்றோம் ?
இவர்களுடைய பாணியில் தீவிரவாதிகள் என்று சொல்லக் கூடிய கிளர்ச்சியாளர்கள் நகரங்களில் தங்கி இருப்பார்களா ? நிச்சயமாக தங்கி இருக்க மாட்டார்கள் ! அவர்கள் தங்களது ஜாகையை நகருக்கு வெளியே அமைத்துக் கொள்வார்கள் !
ஆனால் இங்கு தீவிரவாதிகளை ஒழித்து விட்டோம் என்று அநியாயமாக அப்பாவி பெண்களை> பச்சிளங் குழந்தைகளை> தள்ளாடும் முதியவர்களை நரவேட்டையாடி அவைகளை ஊடகங்களில் வெளிப்படுத்தி தீவிரவாதிகளை ஒடுக்கி விட்டோம் என்று சர்வதேச தீவிரவாதி புஷ்ஷூக்கு கணக்கு காட்டுகிறார்கள் இவர்கள் தங்களுடைய விரலைக் கொண்டு தங்களுடைய கண்களை கீறிக் கொள்ளும் மண நோயாளிகள் அமெரிக்காவுடைய தலைமைப் பொறுப்புக்கு போட்டியிடக் கூடியவர்கள் ஆட்சிக்கு வருவதற்கு முன்பே அமெரிக்காவின் வல்லரசு தனத்தை விட்டுக் கொடுத்திட மாட்டேன் என்று தனது பிரச்சாரத்தில் மக்களிடம் உறுதிக் கூறுகிறார்கள்.
அனு ஆயுத வல்லமைக் கொண்ட இவர்களோ தங்களுடைய நாட்டின் பலம் தெரியாமல் தங்களுடைய அற்ப பதவிக்காக தங்களது நாட்டின் ஸ்திரத் தன்மையை விட்டுக் கொடு;க்கிறார்கள்.
9:80. (முஹம்மதே!) அவர்களுக்காக பாவ மன்னிப்புக் கேளும்! அல்லது கேட்காமல் இரும்! அவர்களுக்காக நீர் எழுபது தடவை பாவமன்னிப்புக் கேட்டாலும் அவர்களை அல்லாஹ் மன்னிக்கவே மாட்டான். அல்லாஹ்வையும் அவனது தூதரையும் அவர்கள் மறுத்ததே இதற்குக் காரணம். குற்றம் புரியும் கூட்டத்துக்கு அல்லாஹ் நேர் வழி காட்ட மாட்டான்.
وَلْتَكُن مِّنكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَأُوْلَـئِكَ هُمُ الْمُفْلِحُونَ
3:104. நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர்.
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.... அன்புடன் அதிரை ஏ.எம்.பாரூக்